புவனேஸ்வர்:

லப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண செய்யும் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இதற்கு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மாநிலத்தில் சாதி வேறுபாடுகளை களையும் வகையிலும், சமுத்துவம் ஏற்படும் வகையிலும் சாதி மறுப்பு கலப்பு திருமணத்தை ஒடிசா அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது பரிசு தொகையை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிஷா அரசு உயர்த்தியது.

இந்தத் தொகையை பெறத் திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்தத் தொகை பணமாகக் கையில் கொடுக்கப்பட மாட்டாது. நிலமாகவோ, வீட்டுக்குத் தேவையான பொருட்களாகவோ வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.