கவுகாத்தி,

னமழை வெள்ளம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா வன விலங்கு காப்பகத்தில் 140 வன விலங்குகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களும் கடும் மழை பெய்து வருகிறது. பீகார், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில் பெய்துவரும் பேய்மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அசாமில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பிரபலமான வனவிலங்கு காப்பகமான  காசிரங்கா  தேசியப் பூங்கா முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த பூங்காவில் உள்ள வன விலங்குகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதையடுத்து, அங்கு பராமரிக்கப்பட்டுவரும் விலங்குகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

சுமார் 500 சதுர கிலோமீட்டர் அளவுள்ள இந்த பூங்காவின் 80 சதவீதம் பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால்,   இந்த வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம், புலி, அரியவகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்றவை வெள்ளத்தில் அடித்துச்செல்ல வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பத்தாம் தேதியில் இருந்து சில நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி இரு யானைகள், 10 காண்டா மிருகங்கள், 120-க்கும் மேற்பட்ட சதுப்பு மான்கள், காட்டெருமைகள், முள்ளம்பன்றி உள்பட 140 வன விலங்குள் உயிரிழந்ததாக காசிரங்கா வன விலங்கு காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி இறந்த விலங்குகளின் உடல்கள் அவ்வப்போது அகற்றி, அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.