கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி பிரபுராஜா இயக்கி, நடித்துள்ள படம், ‘படைப்பாளன்’. இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய, கிருபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

படம் குறித்து இயக்கி நடித்துள்ள பிரபுராஜா கூறும்போது, “உதவி இயக்குநர் ஒருவர்,படத்தை இயக்க முயற்சிக்கும் கதை இது. அதே நேரம் இன்னொரு டிராக்கில் த்ரில்லராகவும் படம் விரியும்” என்றார்.

ட்ரெய்லர் வீடியோ: