டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில், தன்னை திகார் ஜெயிலில் அடைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் கோரியதைத் தொடர்ந்து,  ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்று போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் 5ந்தேதி வரை வைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், சிதம்பரத்துக்கு எதிராக போலீசார்  ஜாமீனில் வெளிவராத வாரண்ட் பிறப்பித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  பி.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் , 72வயதாகும் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க வேண்டாம், அதற்கு பதில்   வீட்டுக் காவலில் வைக்குமாறு  கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம்,  வழக்கில், யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படாது, ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்றும்,  இடைக்கால பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.  அவரது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தால், அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.