சென்னை

விமான நிலையத்தில் டீ மற்றும் காபி விலையக் கேட்டு அதிர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதிகளில் கடும் விலை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  பல சமூக தளங்களிலும் இது குறித்த விமர்சனங்கள் பதியப் படுகின்றன.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ப சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “சென்னை விமான நிலையத்தில் உள்ள காஃபி டேவுக்கு சென்று ஒரு டீ ஒன்றை ஆர்டர் செய்தேன்.  ஒரு கோப்பை சூடான நீருடன் அதில் டிப் செய்ய டீ பேக் ஒன்று எனக்கு வழங்கப்பட்டது.  அதன் விலையைக் கேட்டதற்கு விலை ரூ.135 எனவும் காஃபியின் விலை ரூ.180எனவும் தெரிவித்தனர்.   இதை கேட்டு நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன்”  என பதிந்துள்ளார்.

மேலும், “இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள் என வினவியதற்கு பலர் வாங்குகிரர்கள் என கூறினார்கள்.    நான் விலையைக் கேட்ட அதிர்ச்சியில் எனது டீ ஆர்டரை ரத்து செய்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.    விலையைக் கேட்டதால் அந்த டீயை பருகாமல் நிராகரித்த என் செயல் சரியா அல்லது தவறா?” என வினவி உள்ளார்.