டில்லி

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே இது குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

சிதம்பரம் தனது பதிவில்.

”நாங்கள் விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் ஒவ்வொரு கோர்ட்டிலும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த வாதத்தை நிரூபிப்பதாக உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு அமைந்துள்ளது.  உடனடியாக நாடாளுமன்ற சபாநாயகர் உடனடியாக ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாங்கள் கடந்த 162 ஆண்டுகளில் அவதூற்றுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள், நீதிமன்றம் தண்டனை விதித்தது இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கி வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்று கருதுகிறோம்.”

என்று கூறி உள்ளார்.