ஓடத்துடிக்கும் சாஃப்ட்வேர் நிறுவனங்கள்! ஆடிப்போன கர்நாடக அரசு!

Must read

பெங்களூரு:
ந்தியாவின் தலைநகர் டில்லியாக இருந்தாலும், வணிக தலைநகர் மும்பை என்பது போல, சாப்ட்வேர் தொழில்நுட்ப தலைநகராக விளங்குவது பெங்களூரு.
உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி, உட்பட ஏராளமான  நிறுவனங்கள், பெங்களூருவில் இயங்கி வருகின்றன. இந்தத் துறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பணியாற்றுகிறார்கள்.
சாஃப்ட்வேர் நிறுவனங்கள், பெங்களூருவை தேர்ந்தெடுக்க நிறைய காரணமங்கள்.  மெட்ரோ சிட்டியாக இருந்தாலும், இன்னமும் இதமான சீதோஷ்ணநிலை நிலவும் நகரம். கேட்டவுடன் கிடைக்கும் இடம், மின் வசதி… இப்படி பல காரணங்களால் ஐடி நிறுவனங்கள் பெங்களூருவை தேர்வு செய்து, தங்களது கிளைகளை இங்கு நிறுவி உள்ளன.
இப்படி பெங்களூருவுக்கு வேண்டி விரும்பி வந்த ஐ.டி. நிறுவனங்கள், எங்கேயாவது ஓடிவிட வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன.
காவிரியை முன்வைத்து, கன்னட வெறியர்கள் நடத்திய கலவரம்தான் இதற்குக் காரணம். கடந்த ஒருவாரமாக பெங்களூருவில் இயல்பு நிலை இல்லை. ஆகவே ஐடி பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மொத்த இழப்பு பல்லாயிரம்கோடி ரூபாய் என்று கதறுகின்றன ஐ.டி. நிறுவனங்கள்.
bpo2-621x414
தவிர, ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோர் 80 சதவிகிதம் பேர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் தற்போதைய கலவரத்தால் மிரண்டுபோய் கிடக்கிறார்கள். பணிமாற்றம் கேட்டு பலர் விண்ணப்பித்திருக்கிறார்கள். கிடைக்காவிட்டால் வேறு வேலை தேடவும் தயாராக இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கிட்டதட்ட எல்லா ஐ.டி. நிறுவனங்களுமே வேறு ஊருக்கு ஜாகையை மாற்ற முடிவெடுத்திருக்கின்றன.
இந்த தகவைலை அறிந்த கர்நாடக மாநில அரசு, ஆடிப்போய்விட்டது. ஐ.டி. நிறுவனங்களால் கிடைக்கும் வரி வருவாய், வேலை வாய்ப்பு ஆகியவேற்றோடு, “இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு,  தகவல் தொழில்நுட்பத் தலைநகரம்” என்று இருக்கும் அந்தஸ்து போய்விடுமே!
இப்போது கர்நாடக அரசு அதிகாரிகள், “இனி பிரச்சினை ஏதும் வராமல் பார்த்துக்கொள்வோம். இடம் மாறும் முடிவைக் கைவிடுங்கள்” என்று பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்தபடி இருக்கிறார்கள்.
 
 
 
 

More articles

Latest article