1patanjali
டில்லி: பதஞ்சலி வணிக பொருட்களின் இமாலய வெற்றியின் காரணமாக அதன் நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்யா இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினார்.
பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் முகமாக இருக்கலாம், ஆனால் முதுகெலும்பு ஆச்சார்யா பால கிருஷ்ணா. பதஞ்சலி நிறுவனத்தின் 94% உரிமம் இவருடையது. பதஞ்சலி நிறுவனத்தின் இமாலய வணிக வெற்றி இவரை இப்போது இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவராக்கி இருப்பதாக ஹுருண் இந்தியா ரிச் லிஸ்ட் என்ற சீன நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது,
நேபாள வம்சாவழியைச் சேர்ந்த 44 வயது ஆச்சர்யா பாலகிருஷ்ணா பாபா ராம்தேவின் நெடுங்கால நண்பராவார். 1990களில் இவர் பாபாராம்தேவுடன் சேர்ந்து “திவ்யா பார்மசி” என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஹரித்துவாரில் துவங்கினார். இதுவே இன்று பதஞ்சலி என்ற ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
இவர் தினமும் 15 மணிநேரம் வேலை செய்கிறார். வேலை செய்வது தனக்கு பிக்னிக் போவது போல என்று இவர் தமது சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். இவருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த பிடிக்காது. இவர் அறையில் கம்பியூட்டர் இல்லை. ஒரு ஐஃபோன் மட்டுமே பயன்படுத்துகிறார்.
இவர் நேபாள பெற்போருக்கு பிறந்தபடியால் இந்தியாவின் குடியுரிமை பற்றி சர்ச்சைகள் உண்டு. போலி கல்வி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக இவர்மீது 2011-ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு தொடரப்பட்டு இவர் கைதும் செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாதபடியால் இவர் இரு ஆண்டுகளில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.