97வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
ஆஸ்கார் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த விருதுப் பட்டியலில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை வாங்கி அதிக விருதுகளை வாங்கிய திரைப்படமாக உள்ளது.
அட்ரியன் பிராடி மற்றும் மைக்கி மேடிசன் முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளைப் பெற்றனர். சீன் பேக்கரின் அனோரா சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
ஆஸ்கார் 2025க்கான பரிந்துரைகளில் எமிலியா பெரெஸ், தி ப்ரூடலிஸ்ட், அனோரா உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் படத்திற்காக கீரன் கல்கின் பெற்றார் ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த விருதை வழங்கி ஆஸ்கார் 2025 நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஆஸ்கார் 2025 விருது பட்டியல் :
சிறந்த படம்: அனோரா
சிறந்த நடிகர்: தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக அட்ரியன் பிராடி
சிறந்த நடிகை: அனோரா படத்திற்காக மைக்கி மேடிசன்
சிறந்த துணை நடிகர்: எ ரியல் பெயின் படத்திற்காக கீரன் கல்கின்
சிறந்த துணை நடிகை: எமிலியா பெரெஸுக்காக ஜோ சல்டானா
சிறந்த இயக்குனர்: அனோரா படத்திற்காக சீன் பேக்கர்
சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக லோல் க்ராலி
சிறந்த அசல் திரைக்கதை: அனோரா படத்திற்காக சீன் பேக்கர்
சிறந்த தழுவல் திரைக்கதை: கான்க்ளேவ்
சிறந்த அசல் இசை: தி ப்ரூடலிஸ்ட் படத்திற்காக டேனியல் ப்ளூம்பெர்க்
சிறந்த ஒலி: டூன் பார்ட் 2
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: டூன் பார்ட் 2
சிறந்த அசல் பாடல்: எமிலியா பெரெஸில் இடம்பெற்ற எல் மால்
சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ’ம் ஸ்டில் ஹியர்
சிறந்த ஆவணப்பட குறும்படம்: தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா
சிறந்த எடிட்டிங்: அனோரா
சிறந்த ஆவணப்பட சிறப்பு படம்: நோ அதர் லேண்ட்
சிறந்த அனிமேஷன் படம்: ஃப்ளோ
சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்டு படத்திற்காக பால் டேஸ்வெல்
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: தி சப்ஸ்டான்ஸ்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்டு
சிறந்த நேரடி அதிரடி குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ