சென்னை: சென்னையில் இன்று 15செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. y நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் – 7.7 செ.மீ நந்தனம் – 5.2 செ.மீ பூந்தமல்லி – 4.5 செ.மீ காரைக்கால் – 7.0 செ.மீ மழையும், நாகை – 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது. இதையும் படிக்க: வடகிழக்குப் பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று 6.4 செ.மீ முதல் 15 செ.மீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.  சென்னை மழுவதும்  வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். இதனால் முக்கிய சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…