முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு!

Must read

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

தேனி மக்களவைத் தொகுதி எம்.பியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகனுமான  ரவீந்திரநாத், இன்று காலை  சென்னை தலைமைச் செயலகம் வந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பின்போது,  தேனி மக்களவைத் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார். முன்னதாக முதல்வருக்கு ‘ பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை பரிசாக அளித்தார்.

More articles

Latest article