ஓ.பி.எஸ்.. அது வேற வாய்

நெட்டிசன்:

அதிமுவின் இரு துருவங்களாக இருந்த பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி அணியும் கண்கள் பணித்தன… இதயம் இணைந்தது என்று டயலாக் பேசி இணைந்தனர்.

இதற்கு பிரதியுபகாரமாக பன்னீருக்கு துணைமுதல்வர் பதவி கிடைத்துள்ளது. அவரது தீவிர ஆதரவாளரான மா.பா.வுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்-ன் நிலை குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மீம்ஸ் போடப்பட்டு அவரது நிலைப்பாடு குறித்து வறுத்தெடுத்து வருகிறார்கள்… அப்போது ஓபிஎஸ் கூறியது வேறவாய்… தற்போது சொல்வது நாற வாய்.. என்று மீம்ஸ்கள் போட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எடப்பாடி அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர், நேற்று கட்சிகள் இணைந்துள்ளது காரணமாக, என் மனதில் இருந்த பாரம் இன்றோடு அகன்றுவிட்டது என்று டுவிட் செய்துள்ளார்.

ஏற்கனவே, எடப்பாடி அரசு, ஊழல் அரசு என்றும் அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக கடந்த 3ந்தேதி தனது டுவிட்டர் பதிவில்,  இன்று நடைபெறுகின்ற ஆட்சி அனைத்து நிலைகளிலும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவேதான் நடைபெறுகிறது. இது அம்மாவிற்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என்று கூறியிருந்தார்.

எடப்பாடி அரசுக்கு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த பன்னீர் அடுத்த 18 நாட்களுக்குள் தனத நிலையை மாற்றி எடப்பாடியோடு கைகோர்த்து… ஆட்சியிலும் துணை முதல்வர் பதவி வாங்கி தனது தர்மயுத்தத்தை கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கி உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில், நெட்டிசன்களில் கலாய்த்து வருகின்றனர். அப்போது ஓபிஎஸ் சொன்ன வேற வாய்… தற்போது சொல்வது வேற வாய்…என்று கலாய்த்து வருகின்றனர்.


English Summary
OPS .. it's another mouth