சென்னை

திமுக கொண்டு வந்த சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில், 63 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

ஆயினும் குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறை மூலமாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீசெல்வம் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.  இவ்வாறு ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்,

“தற்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்”

என்று விளக்கம் தெரிவித்தார்.