தேனி: துணைமுதல்வரின் தொகுதியான தேனி மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடிக்கு எதிராகதுணைமுதல்வர் ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடபிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்தும், அவர்களின் குறைகளை மனுவாக பெற்றும் வருகிறார்.

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையின்  4வது கட்ட பிரசாரம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த பிரசாரம் 22ந்தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று தருமபுரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் இன்று தேனியும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அதைத் தொடர்ந்து,  திருப்பூர், ஈரோடு,  கோவை,சேலம் மாவட்டங்களில்  பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் சொந்த தொகுதியான தேனி மாவட்டத்தில் மக்களை சந்தித்துவரும் ஸ்டாலின், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனு பெற்று வருகிறார்.  தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வதை கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ்,  அவருக்கு எதிரான செயல்களில ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியவர்,  இந்த தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் என்ன செய்தார், க்களுக்கு என்ன செய்துள்ளார்  என்று கேள்வி எழுப்பியதுடன்,  இந்த  தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.   மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார் என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசியவர், திமுக கூட்டத்தில் பங்கேற்று குறைகளைக் கூறும் மக்களை அழைத்து அதிமுக உதவி செய்கிறது என்றும் கூறினார்.