டில்லி

திர்க்கட்சிகள் இந்திய விமானப்படை பெருமையை விட அபிநந்தன் விடுதலையை அதிகம் விரும்பியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   அதை ஒட்டி பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.    அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்த பாக் விமானப்படையை விரட்டிய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கபட்டார்.

உலக நாடுகளின் அழுத்தத்தினால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.   இன்று ஒரு செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி இது குறித்து, “அபிநந்தன் பிடிபட்ட சம்பவம் நிகழ்ந்த போது அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானப்படையை அழித்ததற்காக பெருமைப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால் அவர்கள் கவனம் முழுவதும் அபிநந்தன் விடுதலையில் மட்டுமே இருந்தது.

அபிநந்தன் நமது நாட்டின் எல்லை தாண்டிய போது பிடிக்கப்பட்டிருந்தாலும் அரசு அவரை மீட்க தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் எடுத்தது.    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அபிநந்தன் விடுதலை குறித்து அறிவித்திருக்காவிட்டால் அன்று இரவு அரசியல் கட்சிகள்  ஒரு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தன.

அபிநந்தன் பிடிபட்டபோது அரசு தனது எல்லைக்குள் எந்த நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுத்தது.   ஆனால் எதிர்க்கட்சிகள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி இந்த விவகாரத்தில் புல்வாமா தாக்குதலையும் பாலகோட் விமானப்படை தாக்குதலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்ப முயற்சி செய்தன.   அவர்களுக்கு இந்திய விமானப் படை பெருமை அடைவதில் விருப்பம் இல்லை” என தெரிவித்துள்ளார்.