அவந்திபோரா:
காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும்.

நாட்டின் ஒவ்வொரு கிராமம், தொகுதி, மற்றும் நகரங்களிலும் காங்கிரஸ் தொண்டர்களை காணலாம். இந்திய ஒற்றுமை யாத்திரை, கட்சிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.