ட்டி

ன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்தது.  இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.

மேலும் ரயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் தண்டவாளத்தின் குறுக்கே சாய்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் அடித்துச் செல்லப்பட்டன. எனவே  கடந்த 4 ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையும், 9- aam தேதி முதல் 18- ஆம் தேதி வரையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இந்தப் பணி முழுவதும் நேற்று முடிவடைந்தது.  எனவே இன்று முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரயில் 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியது.

இன்று காலை 180-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டியை நோக்கி மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.  ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.