சென்னை:
ன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் ஆயுதப்படை காவலர் , ஐடி பெண் ஊழியர் என பலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவை தேடிக் கொண்டனர். இதனால் இத்தகைய ஆபத்து மிக்க ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனை நடத்துகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு இன்று முதல் ஒரு வாரம் ஆலோசனை செய்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதி இழப்பு, தற்கொலை குறித்த ஆபத்தை கண்டறியும் தன்மை குறித்து ,ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.