சென்னை:
ண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதுக்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாடுகளை செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் “எண்ணும் எழுத்தும்” திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.