சென்னை: தமிழகத்தில் எண்ணை கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி கோரிய அனுமதி  நிராகரிக்கப்படுவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தின் இன்றைய விவாதத்தின்போது பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழகத்தில் 15 எண்ணை கிணறுகள் அமைக்க  ஒஎன்ஜிசி நிறுவனம் அரசுக்கு விண்ணப்பத்து அனுமதி கோரியிருந்தது. அதன்படி,  அரியலூரில் 10 இடங்களிலும், கடலூரில் 5 இடங்களிலும் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரியிருந்தது.

இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அல்லாத பகுதிகள் என்பதால் இந்த இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்கலாம் என்று ஓஎன்ஜிசி மாநில சுற்றுசூழல் குழுவிடம் அனுமதி கோரி இருந்தது. ஆனால்,  அதை தமிழகஅரசு நிராகரித்து உள்ளது.

அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மறுங்ககப்பட்டுள்ளது என்று  சட்டபேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது  என கூறினார்.