சென்னை

மிழகத்தில் உரிய அனுமதி இன்றி விளம்பர பலகைகள், பேனர்கள்மற்றும் பதாகைகளை நிறுவ தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அதிமுக பேனர் விழுந்து ஒரு பெண் சாலையில் மரணம் அடைந்தார்.  இதன்பிறகு அனுமதி இன்றி பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்க அரசு தடை விதித்தது.

ஆனால் சமீப காலமாகத் தடையை மீறி விளம்பரப்பலகைகள்,  ஃபிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்படுகின்றன.   குறிப்பாக இவை பாஜக போன்ற எதிர்க்கட்சிகளால் அதிக அளவில் வைக்கப்பட்டு மக்களுக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   அதன்படி அனுமதி இன்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் நிறுவத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதை மீறுவோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.