சென்னை,

மிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், சென்னை போன்ற நகரங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் ஒரு நாள் கட்டணமான ரூ.50க்கு பாஸ் எடுத்தும், அதுபோல ஒரு வார கட்டண பாஸ் எடுத்தும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இன்று அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வு காரணமாக, தினசரி மற்றும் வார பஸ் பாஸ்களை கொண்டு பயணம் செய்ய வந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

பஸ் கட்டண உயர்வு காரணமாக இன்று பாஸ் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளபடியால், பாஸை மட்டுமே நம்பி பயணிக்கும் பயணிகள் பெரும் வேதனைக்கு ஆளானார்கள். அரசு டிக்கெட் உயர்வு குறித்து முன்பே அறிவித்திருக்க வேண்டும்… திடீரென அறிவித்தால் என்ன செய்வது என்று அரசு மீது அதிருப்தி அடைந்தனர்.