டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்ட உள்ளது. இவர் காச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோயியல் நிபுணர் ஆக இருந்து வருகிறார். இவருக்கு 2023 ராமன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் ‘ராமோன் மகசேசே’ விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான ‘ராமோன் மக்சேசே’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 1, 2023 அன்று 2023ம் ஆண்டுக்கான ‘ராமோன் மக்சேசே’ விருது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, 65வது ரமோன் மகசேசே விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமன் மகசேசே விருது, விதிவிலக்கான மனப்பான்மை மற்றும் செல்வாக்கு மிக்க தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிடத்தக்க பாராட்டு ஆகும். இந்த ஆண்டு, விழாவின் 65 வது பதிப்பில், நான்கு ஆசியர்களுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது, சர் ஃபசில் ஹசன் அபேட், அன்னை தெரசா, தலாய் லாமா, சத்யஜித் ரே மற்றும் பலர் வரிசையில் இணைந்தனர். அவர்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோர்வி ரக்ஷாந்த், திமோர்-லெஸ்டீயைச் சேர்ந்த யூஜெனியோ லெமோஸ், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒரு சான்றிதழும், மறைந்த ஜனாதிபதியின் உருவம் கொண்ட பதக்கமும், அமெரிக்க டாலர் 50,000 ரொக்கப் பரிசையும் கொண்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவி கண்ணன் இந்த ஆண்டுக்கான ராமோகன் மகசேசே விருதை பெறுகிறார். இவர், Cachar Cancer Hospital and Research Centre தலைவராக உள்ளார். இவரது கண்ணனின் தலைமையின் கீழ் CCHRC ஆனது ஒரு விரிவான வசதியாக மாறியது, மக்களை மையப்படுத்திய மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான சுகாதாரப் பாதுகாப்பு மூலம் அசாமில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தியது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் ரவி கண்ணன். இவர் முன்பு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.