ராமேஸ்வரம்

லங்கை கடற்படையினர் 16 ராமேஸ்வரம் மீனவர்களைக் கைது செய்து 3 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

File pic

இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களைக் கைது செய்வது மற்றும் மீன்பிடி படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளது.  இது குறித்து மத்திய மாநில அரசுகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன.   அப்போது இந்த நடவடிக்கை சற்று குறைந்து மீண்டும் தொடங்குவது அடிக்கடி நடைபெறுகிறது.

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி  படகுகளைத் திரும்ப அவர்களிடம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது.   ஆனால் அதைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாத இலங்கை அரசு இவ்வாறு பறிமுதல் செய்யப்பட 105 படகுகளை ஏலம் விட்டு வருகிறது.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.   மேலும் அவர்கள் சென்ற 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.    தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் ஏலம் விடப்படும் நிலையில் இந்த நடவடிக்கை மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.