உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28 அன்று தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள நகரம், ஒன்றியம் மற்றும் கிராம / பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பகல் 12 மணிக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது என்று விஜய் தலைமை ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தவிர, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் அந்தந்த மாநிலங்களில் மதிய உணவு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.