சென்னை: ஆம்னி பேருந்து கட்டணம்  பல படங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறிய அமைச்சர், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காது, அதில் வசதி மிக்கவர்கள் மட்டுமே பயணிப்பதாக அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாநில அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆம்னி பேருந்து களின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும் அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, நேற்று (26ந்தேதி)  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,  ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக  கூறிய அமைச்சர் சிவசங்கர், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள், ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்துகொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர் என கூறியதுடன்,  ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிப்பது இல்லை என்று கூறியதுடன், ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்பைடயில் இயக்க முடியாது, அவர்கள் தொழில் செய்கிறார்கள் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகளை இயக்காமல், தனியார் பேருந்துகளை நாடும் வகையில்,  தொழில்அதிபர்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக தெரிவித்துள்ள அமைச்சரின் அதிரடி கருத்தை பார்க்கும்போது, அமைச்சரும், அரசும்  மக்களுக்காக இல்லை, தொழிலதிபர்களுக்காகவும், பண்காரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்பது உண்மையாகி உள்ளது.