சென்னை: ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னையில் மீண்டும் வார் ரூம் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் வார் ரூம் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 34 பேருக்கு இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க அறுவுறுத்தி உள்ள மத்தியஅரசு, தேவையான மருத்துவ வசதிகள், படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளை தயாராக வைத்திருக்கும்படியும் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா தொற்றின் 2வது அலை பரவலின்போது அதை தடுக்க வார் ரூம் அமைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஒமிக்ரான தீவிர பரவல் காரணமாக மீண்டும் வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் கோவிட் வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக வார் ரூம் தொடங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வார் ரூம்’ (War Room) என்பது கொரோனா  நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருத்துவ தேவைகளை ஒருங்கிணைக்கப்படும். அதற்கான பிறத்யேக அறையே வார் ரூம் என்று அழைக்கப்படுகிறது. அதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்படும். தேவைப்படுவோர் இந்த அறையின் எண்ணை தொடர்புகொண்டால், நோயாளிகளின் சிகிச்சைக்க தேவையான படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் கோவிட் தொடர்பான அவசர அழைப்புக்கு ஏற்கனவே  104 என்ற எண் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது டி விட்டரில் @104_GoTN என்ற ஐடியை tag செய்வதன் மூலம் கவனத்தை ஈர்க்கலாம்.

இந்த வார் ரூமில்  மிகப் பெரிய எல்சிடி திரைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில், உதவி வேண்டி வந்த அழைப்புகள், கோரிக்கைகள் குறித்த தரவுகள் வெளிப்படையாகப் பதிவிடப்படும். மேலும், ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.