தானே,
ழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த பெண்ணிடம் போலீசாரே ரூ.8.5 லட்சம் வழிப்பறி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.20 லட்சம் பணம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக   கொண்டு சென்ற பெண்ணிடம் இருந்து, ரூ.8.50 லட்சத்தைச் சுருட்டிய 3 கான்ஸ்டபிள்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் பாயந்தர் டிவிஷனுக்கு உட்பட்ட நயாநகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 கான்ஸ்டபிள்கள் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
old-money
கடந்த 20-ம் தேதி இரவு ரோந்து பணியின்போது, பணத்துடன் சென்ற ஒரு பெண்ணை வழிமறித்து, அவரிடம் இருந்த 20 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளில் 8.5 லட்சம் ரூபாய் அளவு பணத்தை பிடுங்கினர் ரோந்து போலீசார்.
அப்பெண் கணக்கில் வராத கருப்பு  பணத்தை வைத்திருப்பதாக எண்ணிய அவர்கள், அதுகுறித்து யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாது என்றும் நம்பி சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால், அதற்கு மாறாக அப்பெண், இதுகுறித்து நயா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, 3 கான்ஸ்டபிள்கள் மீதும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 392-வது மற்றும் 34-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.