கணக்கில் வராத பணம்: டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரி! திருத்த மசோதா தாக்கல்

Must read

டில்லி,
ணக்கில் வராத வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 8ந்தேதி இரவு ரூ.500, 1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு,  நவம்பர் 10ந் தேதி முதல் டிசம்பர் 30ந் தேதி வரை வங்கிகளில் பழைய 500, 1000 நோட்டுகள் டெபாசிட் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு டெபாசிட் செய்யப்படும் பணம், ரூ.2 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதற்கான கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். கணக்கு சரியாக இல்லாவிட்டால், அந்த பணம் கருப்பு பணம் என கருதப்பட்டு, வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கருப்பு பணத்தின் அளவு குறைய தொடங்கியது. ஆங்காங்கே செல்லாத நோட்டுக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், குப்பையில் கொட்டப்பட்டும் விரயமாக்கப்பட்டது. 200 சதவிகித வரி என்பது அசாதரணமானது என எண்ணிய பண முதலைகள், பணத்தை வங்கியில் கட்டா மலேயே அழித்து வந்தனர்.
arun-jailty
எனவே,   200 சதவீத அபராதம் விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதே சமயத்தில், செல்லாத நோட்டுகள் அனைத்தும் வீணடிக்கப்படாமல் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்பு கிறது.
ஆகவே கருப்பு பணத்திற்கு கூடுதலாக வரி விதிக்க முடிவு செய்து அதற்கான சட்டதிருத்த மசோதாவை  மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில், ‘வருமானத்தை மீறிய வகையில் சம்பாதித்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 30 சதவிகிதம் வருமான வரியும், 10 சதவிகிதம்  மிகை வரியும் (surcharge), அதற்கு  அபராதமாக 10 சதவிகிதமும் பிடிக்கப்படும்.  ஆக மொத்தம் 50 சதவிகிதம்  வரி விதிக்கப்படும்.
இப்படி வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் இருந்து 25 சதவீதம் பிரதமரின் ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதியில் டெபாசிட் செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் வராத டெபாசிட் தொகைக்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் சேர்த்து 85 சதவிகித வரி  விதிக்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article