டில்லி:
டந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
0
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘வங்கிகள் மூலம் கண்டறியப்பட்ட கள்ளநோட்டுகள்’ என்ற தலைப்பிட்ட அந்த அறிக்கையில், “19 லட்சம் கள்ள நோட்டுகள் ( எண்ணிக்கை) இப்படி விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ரூ.54.21 கோடி மதிப்புள்ள ரூ.100 நோட்டுக்கள், ரூ.42.8 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுக்கள் 8.56 லட்சமும்; ரூ.47 கோடி மதிப்பிலான ரூ.1000 நோட்டுக்கள் 4.7 லட்சமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, “வங்கிகளில் கள்ள நோட்டுக்களை கண்டறியும் மிஷின்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏ.டி.எம்., மிஷின்களில் பணம் நிரப்புவதற்கு முன் மிஷின்கள் மூலம் நோட்டுக்கள் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் நிரப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்” அந்த அறிக்கையில்  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.