எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு ஓட்டல்களில்  அதிரடி ஆய்வு நடக்கிறது

Must read

.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை. சட்டத்துக்கு புறம்பாக  சென்னை கூவத்தூர் பகுதியில் உள்ள இரு நட்சத்திர ஓட்டல்களில் அடைத்துவைத்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம், ஓட்டலில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு உணவு சரிவர கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துமாறு கூவத்தூரை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள இரு விடுதிகளிலும் இன்று காலை, செய்யூர் வட்டாச்சியர் ராமச்சந்திரன்  மற்றும் மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதிகாரிகள் வரவை எதிர்பார்க்காத ஓட்டல் நிர்வாகமும், எம்.எல்.ஏக்களுக்கு பொறுப்பான அமைச்சர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதிகாரிகளின் அதிரடி ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

More articles

Latest article