புவனேஸ்வர்:

இந்தியன் மெட்டஸ் மற்றும் பெரோ அலாய்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடி கடன் தள்ளுபடி செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் ஒடிசா மாநில பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓடிசா ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளத்தின் எம்பி பாய்ஜெயந்த் பாண்டாவுக்கு சொந்தமானது. இந்நிறுவன துணைத் தலைவராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒடிசாவில் உள்ள சிபிஐ மாநில தலைமை அலுவலகம் முன்பு சமாஜ்வாடி கட்சி தலைவர் ராபி பேஹ்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

எம்பி தனது அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கடன் தள்ளுபடி பெற்றதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். பெஹரா மேலும் கூறுகையில், ‘‘90 நாட்களுக்கு இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஒடிசா மக்களுக்கும், நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பெஹ்ரா மற்றும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கு ஊதியம் வழங்குவதற்காக இந்த பெரிய தொகையை கடனாக பெற்றார்’’ என்றார்.