எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Must read

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், திரௌபதி முர்மு-வுக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் முறையாக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அடுத்து கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று நவீன் பட்நாயக் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

More articles

Latest article