நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறையிடம் மீண்டும் அவகாசம் கோரினார் சோனியாகாந்தி…

Must read

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக, உடல்நலத்தை காரணம்காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீண்டும் அவகாசம் கோரியுள்ளர். அவருக்கு அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அதன்படி ராகுல்காந்தி 5 நாள் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தி, அவகாசம் கோரியிருந்தார். அதை ஏற்று ஜூன் 23ந்தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், சோனியா மீண்டும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கு ஆளானதால், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுதான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாளை விசாரணைக்கு ஆஜராவது கேள்விக்குறியானது.

இந்த நிலையில், தனது  உடல்நிலை சீராக இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

சோனியாவின் கோரிக்கையை ஏற்று அவரு சிலநாட்கள் அமலாக்கத்துறை அவகாசம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article