ஓகி புயல்: காணாமல் போன மீனவர்களுக்கு நாளை நிவாரண தொகை: எடப்பாடி வழங்குகிறார்

சென்னை:

கி புயலில் போது காணாமல் போன மீனவர்களுக்கான நிவாரண தொகையை நாளை தமிழக முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்.

சென்னையில் நாளை நடைபெறும்  நிகழ்ச்சியின்போது 193 மீனவர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

டந்த வருடம் நவம்பர் 30ந்தேதி வங்க கடலில் உருவான  ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய இந்த புயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் சரியான தகவல்கள் கொடுக்காததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குளாகினர்.

இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் இன்னும் திரும்பாத நிலையில், அரசு கணக்கெடுப்பின்படி காணாமல் போன 193 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய்  நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
English Summary
Ockhi storm disappeared fisherman, TN C M handover 20 lakhs subsidy tomorrow