கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. முழுமையாக முடிக்கப்பட்ட படங்களை பல்வேறு ஓடிடி தளங்கள் போட்டியிட்டு வாங்கி வெளியிட்டு வருகின்றன.

அனைவரின் மிகுந்த எதிர்பார்ப்புக்கப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று படம் நேரடியாக அமேசான் பிரைமில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘நுங்கம்பாக்கம்’ படம் நேரடியாக ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படத்தின் மீது ராம்குமார் குடும்பத்தை சேர்ந்தோர் தொடுத்த வழக்கு மற்றும் திரைப்படத்தின் மேல் உள்ள அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது .