சென்னை:
டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியாவின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் குறைத்து விட்டது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் முதல் வாரம் வரை 20 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 150 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முழுமையாக குறைந்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 800 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் மேலும் 2018-ஆம் ஆண்டு  1,300 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனாலும் இப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் டெங்கு மற்றும் மலேரியாவை குறைப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிகமாக வீட்டினுள் இருந்து வந்தனர், மேலும் வைரஸ் தொற்றின் காரணமாக அவர்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். டெங்கு மற்றும் மலேரியா குறைந்ததற்கு இதுவே காரணமாக கருதப்படுகிறது. மேலும் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆகையால் யாரும் தற்போது மருத்துவமனைக்கு வருவதில்லை ஆகவே நோய் தொற்று ஏற்படும் அபாயம் அனைவருக்கும் குறைவாகவே உள்ளது, ஆய்வுக் கூடங்களும் கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர், இப்போது தான் டெங்கு மாதிரிகளை சோதனை செய்யத் துவங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொசுவின் லார்வாக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் கிணறு மற்றும் தண்ணீர் தொட்டிகளில் லார்வாக்களை உண்ணும் மீன்களை விட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த வருடம் இதே போன்று 2 லட்சம் மீன்கள் தொட்டிகள் மற்றும் கிணறுகளில் விடப்பட்டிருந்தன என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.