சென்னை

சென்னை நகரில் இரண்டே நாட்களில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் ரூ.2 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25 முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.   தற்போது 7 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.  இப்போது ஊரடங்கு உத்தரவில் பலவித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணியாமல் வெளியே வருவோருக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 மற்றும் நெறிமுறைகளை பின் பற்றாத சிகை அலங்கார கூடம், உடற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.5000 அபராதம் என அரசு எச்சரித்துள்ளது.

ஆயினும் விதி மீறல் காரணமாகத் தண்டனை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   கடந்த 2 நாட்களில் இவ்வாறு சுமார் ரூ.2 கோடி வரை அபராதம் வசூலாகி உள்ளது.