துரை

துரை புதூர் பகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் மைக்கேல் ஸ்டாலின் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சுமார் 31 வயதாகும் மைக்கேல் ஸ்டாலின் மதுரை திருப்பாலை ஜி.ஆர்.நகர் விரிவாக்கப் பகுதியை சேர்ந்தவர் ஆவர்   இவர் அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததுடன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் புதூர் பகுதி பொறுப்பாளராக இருந்தார்.

கடந்த சில தினங்களாக மைக்கேல் ஸ்டாலின் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.  அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்ர். திருப்பாலை காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மைக்கேல் ஸ்டாலினின், கண்களை தானம் செய்வதற்கு அவரது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். அவரது கண்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது.  தனது தற்கொலைக்கு பிறகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண் தானம் அளித்தது பேசு பொருளாகி உள்ளது.