கொல்கத்தா: காலம் மாற மாற, தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களும் மாறி வருகின்றன என்பது இந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சின்னங்களின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளலாம்.

தேர்தல் சின்னங்கள் என்றாலே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, பல சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்களை கவனித்தால், காளை மாடு, கூடை, கோடாரி, மெழுகுவர்த்தி மற்றும் கேரட் போன்றவை இருக்கும்.

இன்றும்கூட, சில அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு துடைப்பம், அரிக்கேன் விளக்கு, கதிர் அரிவாள் போன்ற சின்னங்கள் உள்ளன.

இந்தத் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில், சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர் மவுஸ், பென் டிரைவ், லேப்டாப், மொபைல் சார்ஜர் மற்றும் பிரட் டோஸ்டர் உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள், இந்தியாவின் மாறிவரும் வாழ்க்கைச் சூழலைக் குறிப்பதாக உள்ளன.

மேலும், இத்தகைய சின்னங்களின் மூலம், வாக்காளர் பட்டியலில் கணிசமாக இடம்பெற்றுள்ள இளைய தலைமுறையினரைக் கவர முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

– மதுரை மாயாண்டி