சென்னை:
த்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதால், பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் பலகட்சிகளும் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ம.தி.மு.கவும் போராட்ட அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9
மதிமுகவின் உயர் நிலை குழுக் கூட்டம்செ,  அதன் தலைமையகமான சென்னை தாயகத்தில் தொடங்கியது. மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைப்பெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர் வைகோ, ஈரோடு கணேச மூர்த்தி, மல்லைசத்யா உள்ளிட்ட உயர் நிலை குழு உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இக் கூட்டத்தில் தமிழக பிரச்சனைகள் குறித்தும், காவிரி நதிநீர் குறித்தும்,  மற்றும்  ரூபாய் நோட்டுகள்  செல்லாது. என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்தும் விவாகாதிக்கப்படுவதாக கூற்ப்படுகிறது. பல்வேறு கட்சிகள் பண ரத்து திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில் மதிமுகவும் போரட்டம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.