சரியாக பிரிண்ட் ஆகாத 500ரூபாய்: மும்பை ஏடிஎம்மில் வந்தது கள்ள நோட்டா?

Must read

மும்பை,
மும்பை ஏடிஎம்மில் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது கள்ள நோட்டாக இருக்குமோ? என்று அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பணப்பிரச்சினையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்யப்பட வில்லை. ஒருசில மாநிலங்களில் மட்டுமே புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது.

ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி 11 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுகள் வடமாநிலங்களில் ஒருசில இடங்களில் மட்டுமே புழக்கத்துக்கு வந்துள்ளன. அதேநேரம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பரவலாகக் கிடைத்து வருகிறது.
இதனால் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு சரியான சில்லறை கிடைக்காமல் பொதுமக்களும், வியாபாரிகளும் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மும்பை ஏடிஎம்-மில் பாதி அச்சடிக்கப்பட்ட நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.
 
இந்தநிலையில், மும்பையில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள அச்சு மை பாதி அழிந்தநிலையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலை தங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது உண்மையிலேயே புதிய 500 ரூபாய் நோட்டுகள்தானா அல்லது கள்ள நோட்டா? அரசு விளக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அவசரம் அவசரமாக பிரிண்ட் செய்யப்பட்டதால் நோட்டில் உள்ள மை அழிந்ததா? அல்லது கள்ளநோட்டு தானா என்பதை அரசு உடனடியாக கைப்பற்றி விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

More articles

Latest article