train-full
கான்பூர்,
உ.பி. கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் 63 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 63-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  புஹாராயன் எனும் பகுதியில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை  3 மணி அளவில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது.
14 ரயில் பெட்டிகள் கவிழ்ந்த இந்த விபத்தில், 63-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர். அவர் அருகிலுள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், விபத்துக்குள்ளான பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படையின ருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 60-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளை உ.பி. மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்  முடுக்கி விட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த சம்பவ இடத்துக்கு விரையுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.