பாகிஸ்தான்மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது: புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை!

டில்லி,

ந்திய எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது என புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந் தல்பீர் சிங் கடந்த 31ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து,  ஜெனரல் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

அதையடுத்து,  அமர்ஜவான் ஜோதியில் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார்.

தளபதியாக பதவி ஏற்றதும், செய்தியாளர்களிடம் ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது,

இந்திய எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ராணுவத்திடம் உள்ளது. நமக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டால், எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயங்காது என உறுதிப்பட தெரிவித்தார்.

நாட்டை காக்க ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் ராணுவத்தின் கிழக்கு கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல் பிரவின் பக்ஷியும்,  தெற்கு கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல் பி.எம்.ஹரிஷ் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Not afraid to attack to Pakistan New Chief of Staff General Bipin Rawat Warning!, இந்தியா, பாகிஸ்தான்மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது: புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை!
-=-