பியாங்பாங்

கொலை முயற்சி காரணமாக வட கொரிய அதிபருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அதிரடிகள் செய்து வரும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் மோதி தொடர்ந்து வருகிறார்.  இவர் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அணு ஆயுத சோதனை ஆகியவற்றை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்து வருகிறார்

அண்மையில் வடகொரியத் தலைநகர் பியாங்யாங் நகரில் குண்டுவெடிப்பு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் இது கிம் ஜாங் உன் னை கொலை செய்யப்பட்ட முயற்சி என சந்தேகிக்கப்படுகிறது. எனவே கிம் ஜாங் உன் னின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இதற்காக வெளிநாட்டிலிருந்து நவீன பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதியாகி உள்ளன.

அவரது பாதுகாப்புக் குழுவில் உள்ளவர்கள் பிரீப்கேஸ் போன்ற பாதுகாப்பு சாதனைத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை எதுவும் தெரிய வந்தாலோ அல்லது துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்பட்டாலோ, அதை வைத்து கிம் ஜாங் உன் னை பத்திரமாகப் பாதுகாப்பார்கள்.

இந்த பிரீப் கேஸை ஒரு கவசம் போன்று பாதுகாக்க முடியும். அதிபர் கிம் ஜாங் உன் க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.