கர்த்தா

ந்தோனேசிய நாட்டில் பாலி கடலில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்)  தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாகச் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது

பிரபல சமூக வலைத் தளமான எக்ஸ்-ல் (டிவிட்டர்) சில பதிவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.