அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு முறை குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட நிலையில் கடுமையான தண்டனை எதுவும் விதிக்கப்படாமல் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

வியாழனன்று ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட டிரம்ப் காவல்துறையிடம் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் முறையாக அவரை குற்றவாளியென அறிவித்து அவரது புகைப்படத்தை புல்டன் கவுண்டி காவல்துறை வெளியிட்டதுடன் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அவரது புகைப்படத்தையும் விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்தப் புகைப்படம் ட்விட்டரில் வைரலானதை அடுத்து அவரது இந்த புகைப்படத்தை டி-ஷர்ட், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

டிரம்ப் எதிர்ப்பாளர்கள் பலரும் இந்தப் புகைப்படத்துடன் “புடிச்சி உள்ள போடுங்க” (Lock Him Up) என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்டுகளை அணிந்து வருகின்றனர்.

அதேவேளையில், டிரம்ப் ஆதரவாளர்கள் “NEVER SURRENDER!” (சரணடையாதீர்கள்) என்ற வாசகத்துடன் அதே புகைப்படத்தை அச்சிட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் மூலம் டிரம்ப் ஆதரவாளர்கள் இதுவரை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 கோடி வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.