தென் கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவின் இந்த கூட்டு நடவடிக்கையை எதிர்த்து வரும் வட கொரியா கடந்த இரண்டு நாட்களாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை கடலில் வீசி சோதனை செய்து வருகிறது.

ஜப்பானை ஒட்டிய கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை அடுத்து அந்த பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து பசிபிக் மகா சமுத்திரத்தில் தொடர் ஏவுகணை சோதனைகள் நடைபெறும் என்றும் அந்தப் பகுதி தங்களின் ராணுவ பயிற்சிக்கான களமாக வட கொரியா அறிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.