டில்லி

ரும் ஜூன் 22 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா 4ஆம் அலை உண்டாகும் என்பதை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனா பரவல் 3 அலைகளாக ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் கான்பூர் ஐஐடி ஆய்வுக் குழுவினர் வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் 4ஆம் அலை கொரோனா பரவல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தனர்.  இது பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. 

இது குறித்து சென்னை ஐஐடி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சிதாப்ரா சின்கா “தடுப்பூசிகள் போடுவது அதிகரித்துள்ளதால் இந்தியாவில் தற்போது கொரோனா வெகுவாக குறைந்து வருகிறது.  எனவே எதிர்காலத்தில் புதியதாக ஒரு அலை உருவாகும் என்னும் கணிப்பு சரியாக இருக்காது.  அது வெறும் ஊகமாக மட்டுமே இருக்கும்” எனக் கூறி உள்ளார்.

இதைப் போல் அரியான அசோகா பலகலைக்கழக விஞ்ஞான பேராசிரியர், “பெரும்பாலானோர் 2 டொஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 4 ஆம் அலை பாதிப்புக்கு வாய்ப்புக்கள் குறைவு.  மேலும் துல்லியமான தேதியுடன் வரும் எந்த கணிப்பும் நமபத்தகுந்தது அல்ல.  அவை வெறும் யூகங்களே ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.