சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  குறைந்து வருகிறது. தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணியையும் தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.  தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 223  ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று  51,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,46,60,933 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,817 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனவால் மேலும் 1 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 38,012 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து மேலும் 596 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 34,09,674 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,131 ஆக உள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 0
செங்கல்பட்டு 23
சென்னை 67
கோவை 29
கடலூர் 2
தர்மபுரி 4
திண்டுக்கல் 3
ஈரோடு 6
கள்ளக்குறிச்சி 1
காஞ்சிபுரம் 8
கன்னியாகுமரி 5
கரூர் 0
கிருஷ்ணகிரி 1
மதுரை 3
மயிலாடுதுறை 0
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 1
நீலகிரி 6
பெரம்பலூர் 0
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 0
சேலம் 7
சிவகங்கை 1
தென்காசி 0
தஞ்சாவூர் 7
தேனி 1
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 12
திருவண்ணாமலை 5
திருவாரூர் 1
தூத்துக்குடி 1
திருநெல்வேலி 2
திருப்பூர் 7
திருச்சி 4
வேலூர் 6
விழுப்புரம் 1
விருதுநகர் 4